சினிமா நடிகர் விக்னேஷ் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


சினிமா நடிகர் விக்னேஷ் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 27 March 2022 2:28 AM IST (Updated: 27 March 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

சினிமா நடிகர் விக்னேஷ் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த ராம்பிரபு ராஜேந்திரனிடம், சினிமா நடிகர் விக்னேஷ் ரூ.1 கோடியே 71 லட்சம் கொடுத்ததாகவும், அதை மீட்டு்த்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.  இந்தநிலையில் ராம்பிரபு  ராஜேந்திரனிடம் பணியாற்றும் பாலுக்கரசு மற்றும் காந்தமலைவாசன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்துள்ள மனுவில், “நடிகர் விக்னேஷ் கடந்த 27.2.2018-ல் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மட்டுமே அனுப்பியதாகவும், அதே நேரத்தில் ராம்பிரபு ராஜேந்திரனின் வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் திரும்ப அனுப்பப்பட்டதாகவும், எனவே நடிகர் விக்னேசுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே பாக்கி உள்ளது. ஆனால், விக்னேஷ் ரூ.1 கோடியே 71 லட்சம் கொடுத்ததாக கூறி வருகிறார். எனவே இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். 

Next Story