தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது


தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 2:43 AM IST (Updated: 27 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

பேட்டை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மகள் நந்த பிரியா (வயது 21). இவருக்கும், மருதமுத்தூர் புதுப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஆறுமுகம் (30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஆறுமுகம் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும்  நல்லசிவனின் மாடி வீட்டில் வசித்து வந்தனர். 
இந்த நிலையில் ஆறுமுகம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தில் வீடு கட்டி வந்தார். இதில் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
கடந்த 15-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நல்லசிவம் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

Next Story