பாகல்கோட்டை அருகே வினோதம்: சாமிக்கு படைக்கப்படும் மதுவை தீர்த்தமாக குடிக்கும் பக்தர்கள்


பாகல்கோட்டை அருகே வினோதம்: சாமிக்கு படைக்கப்படும் மதுவை தீர்த்தமாக குடிக்கும் பக்தர்கள்
x
தினத்தந்தி 27 March 2022 2:45 AM IST (Updated: 27 March 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே சாமிக்கு படைக்கப்படும் மதுவை பக்தர்கள் தீர்த்தமாக குடிக்கும் வினோதம் நடந்து உள்ளது

பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் குலேதகுட்டா தாலுகாவில் உள்ளது நிங்காபுரா-கெலவடி கிராமம். இந்த கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான லட்சுமி ரங்கநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையையொட்டி திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான திருவிழாவும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் ஒரு வினோத சம்பவம் நடப்பது வழக்கமான ஒன்று.
அதாவது திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் மதுபாட்டில்களை வாங்கி வருவது வழக்கம். அந்த மதுபாட்டில்களை சாமிக்கு படைத்து பூஜை செய்து பின்னர் அந்த மதுவை தீர்த்தமாக நினைத்து குடிப்பது வழக்கமாக நடந்து வரும் ஒன்றாகும். அதுபோன்ற நடைமுறை இந்த திருவிழாவில் நடந்து வருகிறது. இதற்காக கோவில் அருகே சிலர் சாராயமும் விற்று வருகின்றனர். ஆனால் சிலர் கள்ளச்சாராயம் விற்பதாகவும், இதனை தடுக்க கலால்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story