மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி பலி
மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குன்னம்:
பெண் தொழிலாளி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஓகளூர் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி பழனியம்மாள்(வயது 35). கூலித்தொழிலாளியான இவர், லெப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் சிலம்பு அன்சாரி என்பவர் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தின் கட்டுமான வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று பழனியம்மாள் புதிய கட்டிடத்தின் முதல் தளத்தில் வேலை பார்த்தபோது கட்டிடத்தின் மிக அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் சென்றன. அதில் பழனியம்மாளின் வலது கை பட்டதாக தெரிகிறது.
மின்சாரம் பாய்ந்து சாவு
அப்போது மின்சாரம் பாய்ந்து கை மற்றும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பழனியம்மாள் உடலை ைகப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story