இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது


இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 3:05 AM IST (Updated: 27 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் படி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட 2 இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட வேப்பந்தட்டை தாலுகா, பிரம்மதேசம் கீழ வீதியை சேர்ந்த பழனிவேல் மகன் விக்ரமை(வயது 20) கைது செய்து சிறையில் அடைத்தனர். விக்ரமிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு மணி பாராட்டினார்.

Next Story