சங்கரன்கோவில்: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வ பாக்கிய சாந்தினி, அந்தோணிராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துச்செல்வி வரவேற்றார். சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடந்த மருத்துவ முகாமில் கண் டாக்டர் அகிலாண்டபாரதி, காது மூக்கு தொண்டை நிபுணர் ஹரிகர சுதன், குழந்தைகள் நல மருத்துவர் தனிஸ்லாஸ், மனநல மருத்துவர் தேவி பிரபா கல்யாணி, எலும்பு முறிவு மருத்துவர் பாலவிக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதனை செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மருத்துவ முகாமை பார்வையிட்டார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story