சாம்பவர்வடகரையில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்
இந்திய நாடார்கள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
சுரண்டை:
சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் இந்திய நாடார்கள் பேரமைப்பு கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் தலைமை தாங்கினார். சாம்பவர்வடகரை சிலம்பு விளையாட்டு தலைவர் பிச்சைக்கனி நாடார் முன்னிலை வகித்தார்.
இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘சாம்பவர்வடகரையில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வைக்கோல் படப்புகள் எரிந்து சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் தீ விபத்து நிகழும்போது, அவற்றை அணைக்க செல்லும் தீயணைப்பு வாகனங்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைக்கும் வகையில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நீரேற்றும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்று கூறினார்.
மாவட்ட விளையாட்டு அணி தலைவர் மாரியப்பன், மாவட்ட துணை செயலாளர் அரிகிருஷ்ணன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் மாரியப்பன், கிளை நிர்வாகிகள் ராமர், கணேசன், ஜெகன், கதிர்வேல், ஜெகதீஸ், மாரியப்பன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story