தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் திங்கட்கிழமை பாலாலயம்
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் திங்கட்கிழமை பாலாலயம் நடக்கிறது
உடன்குடி:
திருச்செந்தூர் தாலுகா காயாமொழி அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து ஏகாதசி திதியும், திருவோண நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபதினத்தில் இன்று காலை 9 மணி முதல் 10.30மணி வரை சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நடக்கிறது. இதை யொட்டி கும்பாபிசேகம் நடைபெறும் வரை இக்கோவிலில் தினசரி வழக்கமான நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறும். சிறப்பு பூஜைகள் எதுவும் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படமாட்டாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story