வியாபாரிடம் செல் போன் பறித்த வாலிபர். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
வியாபாரிடம் செல் போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி வி.டி. கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சில்பாகுமார் (வயது 40). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது கடையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சில்பா குமார் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் சில்பாகுமார் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலிசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் திருப்பத்தூரை அடுத்த திருமால் நகர் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த ஜெயசீலன் மகன் விக்னேஷ் (23) எனபது தெரிய வந்தது. இதுகுறித்து சில்பாகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தார். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story