பொதுமக்கள் சாலைமறியல்
பொதுமக்கள் சாலைமறியல்
கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழிவு நீர் வாய்க்கால்
திருப்பூர் மாநகராட்சி கல்லாங்காடு பகுதியில் நேற்று சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்தும், கால்வாயில் அதிக அளவில் கழிவுகள் நிரம்பி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அங்கு துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருப்பதாகவும் தெரிகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்காமல் சாலை பணி மேற்கொள்வதை கண்டித்து நேற்று முன்தினம் கல்லாங்காடு பகுதியில் பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் 2-வது நாளாக நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story