கார் மீது லாரி மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி மராட்டியத்தில் பரிதாபம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 March 2022 8:35 PM IST (Updated: 27 March 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

மும்பை, 
மராட்டியத்தில் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
லாரி-கார் மோதல்
மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டம் அஞ்சான்காவ் பகுதியில் உள்ள சுர்ஜி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் புறப்பட்டனர். அவர்கள் வல்காவ் வழியாக நந்த்காவ்பேத் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். கார் நந்த்காவ்பேத்- தேவல்காவ் ரிங் ரோட்டில் போதே கல்லூரி அருகே சென்றபோது, டிரைவர் முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, எதிர்பாராத வகையில் கார் மீது பயங்கரமாக மோதியது. அதன்பிறகு கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி அந்த பகுதியில் இருந்த மின் கம்பம் மீதும் மோதி, எதிர்ப்புற சாலையில் போய் நின்றது. லாரி மோதியதில் மின் கம்பமும் உடைந்தது. லாரியின் 2 முன் சக்கரங்களும் கழன்றன. இதேபோல காரும் அப்பளம் போல நொறுங்கியது.
5 பேர் பலி
இந்தநிலையில் அந்த பகுதியில் வேலை பார்த்து கொண்டு தொழிலாளர்கள் காரில் சிக்கியவர்களை மீட்க ஓடிவந்தனர். எனினும் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தனர். எனவே அவர்கள் உயிருக்கு போராடி கொண்டு இருந்த ஒருவரை மட்டும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவரும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே தகவல் அறிந்து சென்ற போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அமராவதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story