பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி. போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவலம்
திருவலத்தில் பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தற்கொலை முயற்சி
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள சீக்கராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 55). இவர் வேலூர் மாவட்டம், திருவலத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக கடந்த சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் அவர் அந்தப் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி வீடுகளின் கதவுகள் உள்ளிட்ட மரப்பொருட்களுக்கு பயன்படுத்தும் வார்னிஷை குடித்து தற்கொலைக்கு முன்றுள்ளார்.
போக்சோவில் ஆசிரியர் கைது
அவரை அவரது குடும்பத்தினர் திருவலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து இது குறித்து புகார் வந்ததை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி மற்றும் திருவலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் முரளி கிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story