பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காழியூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா காழியூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைக்கப்பட்டு, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பணம், கும்பலங்காரம், முதல் கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
பின்னர் கருவறையில் அமைந்துள்ள பொன்னியம்மன் சிலைக்கு கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story