பெரமாண்டம்பாளையம் முத்துசாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
பெரமாண்டம்பாளையம் முத்துசாமி கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
மோகனூர்:
மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவத்தி அருகே உள்ள பெரமாண்டம்பாளையம் ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ கொங்கலம்மன், ஸ்ரீ முத்துசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கடந்த மாதம் 6-ந் தேதி மகா கும்பாபிசேகம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து 47 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. 48- வது மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி பல்வேறு சிறப்பு யாகம் செய்து சாமிகளுக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் நீர், உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இரவு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story