திமுக இளைஞரணி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


திமுக இளைஞரணி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 27 March 2022 9:55 PM IST (Updated: 27 March 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு நினைவு கேடயம் மற்றும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரமோகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ், பிரகாஷ், சிட்டி பாபு, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, தேசிங்குராஜா, கூட்டுறவு சங்கத்தலைவர் பெரியண்ணன், நிர்வாகி இளைய சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் உதயசூரியன், தங்கச்செழியன், சாரபு அமைப்பு நிர்வாகிகள் வினோத்குமார், அந்தோணி, ராஜகோபால், நவீன், மாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story