அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு
அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் நீதிபதி திடீர் ஆய்வு செய்தார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம்-2 நீதிபதி மருதுசண்முகம் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆரின் கோப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் தற்காலிகமாக போலீஸ் நிலையத்தில் அடைக்கப்படும் குற்றவாளி அறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு விபத்து உள்ளிட்ட குற்ற வழக்குகளில் பிடிபட்டு போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story