பெட்ரோல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் மோகன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக பொது செயலாளர் தங்கவேல், அமைப்பு செயலாளர் ரமேஷ், நிர்வாகிகள் சக்திவேல், கிருபாகரன், விஜியா, பூங்கொடி, சரவணா, ரோஜா, வீரம்மாள், எல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story