பந்தலூர் அருகே கிராமமக்களை பாடாய்படுத்தும் பரிவாரம் மயான சாலை


பந்தலூர் அருகே கிராமமக்களை பாடாய்படுத்தும் பரிவாரம் மயான சாலை
x
தினத்தந்தி 27 March 2022 9:56 PM IST (Updated: 27 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே கிராமமக்களை பாடாய்படுத்தும் பரிவாரம் மயான சாலையை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே நெல்லிமேடு பரிவாரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு ஊரின் அருகே மயானம் உள்ளது. 

இந்த மயானத்துக்கு செல்ல மண்சாலையும் இருக்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. அத்துடன் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக காணப் படுகிறது. 

மேலும் இந்த சாலை வழியாகதான் பொது குடிநீர் கிணற்றுக்கு செல்லும் பாதையும் உள்ளது. இதனால் இந்த சாலையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். 

ஆனால் இந்த பாதை மிகவும் பழுதடைந்து இருப்பதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. 

மேலும் மண் சாலையாக இருப்பதால் மழை பெய்யும் போது மண் அரிப்பும் ஏற்பட்டு இந்த சாலை படுமோசமாக காணப் படுகிறது. அத்துடன் சாலையின் இருபுறத்திலும் புதர்கள் அதிகமாக இருப்பதால் அந்த வழியாக செல்பவர்களை அது பதம்பார்த்து விடுகிறது.

 இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, இந்த பாதை படுமோசமாக இருப்பதால் இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்லும்போது அவதியடைந்து வருகிறார்கள். 

எனவே கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


Next Story