ஓசூர் வழியாக கேரளாவிற்கு காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்


ஓசூர் வழியாக கேரளாவிற்கு காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 March 2022 9:56 PM IST (Updated: 27 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் வழியாக கேரளாவிற்கு காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார், நேற்று ஜூஜூவாடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 68 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சோஜன் (வயது34), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்பையா (45) ஆகிய 2 பேரும் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story