கிரானைட் கற்கள் கொண்டு சென்ற 2 லாரிகள் பறிமுதல்
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
Text Sizeஉத்தனப்பள்ளி அருகே கிரானைட் கற்கள் கொண்டு சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் உத்தனப்பள்ளி சாலையில் சூளகிரி ஜங்ஷன் பக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற 2 லாரிகளை சோதனை செய்த போது அதில் கிரானைட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire