குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு


குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

குருபரப்பள்ளி அருகே 3 மாடுகள் திருட்டு போனது.

குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கங்கசந்திரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 53). விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு இவர் மாடுகளை தனது கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது 3 பசு மாடுகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து கோவிந்தன் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story