சூளகிரியில் கார் மீது சுற்றுலா பஸ் மோதி பெண் சாவு 7 பேர் படுகாயம்


சூளகிரியில் கார் மீது சுற்றுலா பஸ் மோதி பெண் சாவு 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் கார் மீது சுற்றுலா பஸ் மோதியதில் பெண் இறந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூளகிரி:
சூளகிரியில் கார் மீது சுற்றுலா பஸ் மோதியதில் பெண் இறந்தார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மீது பஸ் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் ராஜூ. இவர், தனது குடும்பத்துடன் காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். சூளகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்ற போது, ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற சுற்றுலா பஸ் கார் மீது மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. 
இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் சென்ற ராஜூவின் மனைவி சாரதா (வயது28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த 7 பேர்் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு. ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இறந்த சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story