கோத்தகிரி அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள கொட்டக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 27), கூலித் தொழிலாளி. இவர் இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அவர் சக்கத்தா மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, அங்கு குடிபோதையில் நின்றிருந்த 4 பேர் காலி மதுபாட்டில்களை சாலையில் உடைத்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களிடம் ஏன் இதுபோன்று செய்கிறீர்கள் எ்னறு சுரேந்திரன் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து சுரேந்திரனை சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை தாக்கிய சக்கத்தா கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பிரதீப் (33), விவேக் (31), தீபக் (22), ரித்திக் (27) ஆகிய 4 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story