குருபரப்பள்ளி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி கிளீனர் பலி 8 பயணிகள் காயம்
குருபரப்பள்ளி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி கிளீனர் பலியானார். மேலும் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி கிளீனர் பலியானார். மேலும் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.
லாரி மீது பஸ் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் இருந்து ஓசூர் நோக்கி ஜல்லி கலவை எந்திர லாரி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதேபோல கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சை திருச்சி லால்குடியை சேர்ந்த முருகேசன் (53) என்பவர் ஓட்டினார். கிளீனராக அதே ஊரை சேர்ந்த ஆல்பர்ட் (25) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகில் லாரி சென்ற போது பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பஸ் கிளீனர் ஆல்பர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
8 பயணிகள் காயம்
மேலும் பஸ் பயணிகள் தேவக்கோட்டை காமராஜ் (33), பெங்களூரு கே.ஆர்.புரம் செல்லதுரை (53), ஊட்டி பச்சிராஜ் (57), புதுக்கோட்டை சுரேஷ் (42), திருச்சி ஹரி (20) உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான கிளீனர் ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story