தர்மபுரியில் 30ந் தேதி மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 93 வாகனங்கள் ஏலம்
தர்மபுரியில் 30-ந் தேதி மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 93 வாகனங்கள் ஏலம் நடக்கிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 4 சக்கர வாகனங்கள் 11, இரு சக்கர வாகனங்கள் 82 என மொத்தம் 93 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. 4 சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ரூ.10 ஆயிரம் முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். முன்னதாக காலை 7 மணிக்கு வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். இருசக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் உடனடியாக ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை எடுத்து செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story