பென்னாகரம் அருகே 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு


பென்னாகரம் அருகே 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பென்னாகரம்:
பென்னாகரம் அருகே 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கற்கால கருவிகள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கனஅள்ளி பகுதியில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து ஆய்வு குழுவினர் கூறுகையில், மஞ்சநாய்க்கனஅள்ளி, காட்டம்பட்டி மற்றும் காளேகவுண்டனூர் ஆகிய கிராமங்களில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டையாட பயன்படுத்திய கற்கால கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் கோவில் வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.  
ஈமச்சின்னங்கள்
மேலும் இந்த பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைய உள்ளன. இங்கு கிடைத்துள்ள கற்கால கருவிகள் பெரும்பாலும் கூழாங்கற்களை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. நன்கு மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள், இருமுனைக்கருவிகள், தேய்ப்பான்கள் போன்றவை கிடைத்துள்ளன. இந்த கருவிகள் விலங்குகளை வேட்டையாடவும், அவற்றின் தோல்களை நீக்கவும், மரப்பட்டைகளை உரிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறினர்.

Next Story