தர்மபுரி மாவட்டத்தில் 66 மையங்களில் இளநிலை முதுநிலை தட்டச்சு தேர்வு 4 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்பு


தர்மபுரி மாவட்டத்தில் 66 மையங்களில் இளநிலை முதுநிலை தட்டச்சு தேர்வு 4 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 66 மையங்களில் இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 66 மையங்களில் இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற்றது. இதில் 4ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
 தட்டச்சு தேர்வு
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இளநிலை, முதுநிலை அரசு தட்டச்சு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெற வேண்டிய தேர்வு மார்ச் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி, பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 66 மையங்களில் அரசு தட்டச்சு தேர்வு நடைபெற்றது.
இளநிலை, முதுநிலை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் அரசு சார்பில் தட்டச்சு தேர்வுகள் 2 நாட்கள் நடைபெற்றது. தேர்வு மையங்களில் தட்டச்சு பள்ளிகள் சார்பில் ஏற்கனவே தட்டச்சு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அந்தந்த மையங்களில் நடைபெற்ற தட்டச்சு தேர்வுகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் அறை கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.
ஆர்வத்துடன் பங்கேற்பு
மாவட்டம் முழுவதும் காலை, மாலை என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த தட்டச்சு தேர்வில் மொத்தம் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட வணிகவியல் தட்டச்சுப் பள்ளிகள் சங்க தலைவர் ஹரிகரன், செயலாளர் மாதையன், பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த  தட்டச்சு தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் வெளியிடப்படுகிறது.

Next Story