தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 March 2022 10:00 PM IST (Updated: 27 March 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 


பார்வையாளர்களுக்கு அனுமதி

கோத்தகிரி காந்தி மைதானத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த போட்டிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் ரசிகர்கள் வெளியே நின்று போட்டிகளை பார்க்கும் நிலை ஏற்பட்டு வருவதால், ரசிகர்கள் சரியாக விளையாட்டை பார்க்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு நடக்கும் போட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகழிக்க அனுமதி வழங்க வேண்டும்.
ராஜேஷ், கோத்தகிரி.

விபத்து ஏற்படும் அபாயம்

  பொள்ளாச்சி உடுமலை ரோடு தேர்நிலை திடல் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு, அதை சரிசெய்யாமல் விட்டதால் சாலை சேதமடைந்தது. தற்போது அந்த பகுதியில் முழுமையாக குழாய் உடைப்பை செய்யாமல் உள்ளனர். இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து, சாலை சீரமைக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  குமார், பொள்ளாச்சி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்சி வால்பாறை ரோடு அங்கலகுறிச்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.
  ராஜா, அங்கலகுறிச்சி

போக்குவரத்து நெரிசல்

  கோவை கணபதி அடுத்த அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம் பட்டி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் முன்பு காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டு வெளியே வரும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசாரை நிறுத்த வேண்டும்.
  சூர்யகுமார், கணபதி.

பராமரிப்பு இல்லாத கால்வாய்

  கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் அற்புதம் நகரில் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி தெருவுக்குள் வரக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை பராமரிக்க வேண்டும்.
  இளங்கோவன், அற்புதம்நகர்.

பஸ்கள் நிற்குமா?

  பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியில் கோவில்பாளையம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்துவது இல்லை. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  ஜோதி, பொள்ளாச்சி.

வீணாக வெளியேறும் குடிநீர் 

  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மார்க்கெட் அருகே சர்வீஸ் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. இதன் காரணமாக அங்கு தண்ணீர் எப்போதும் தேங்கி நிற்பதால் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி வருவதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. அத்துடன் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் குடிநீருக்கும் தட்டுப்பாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
  கணேசன், கிணத்துக்கடவு.

குண்டும் குழியுமான சாலை

  கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து இடிகரை செல்ல கீரணத்தம், புதுப்பாளையம் நீங்கலாக வேறு 2 சாலைகள் உள்ளன. இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  ஜெகதீஷ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

ஒளிராத தெருவிளக்கு

  கோவை மாநகராட்சி 56-வது வார்டு நேதாஜிபுரம் தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காலனியில் கடந்த 3 நாட்களாக தெருவிளக்கு ஒளிரவில்லை. இதனால் இங்கு இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து இருப்பதால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் வந்தாலும் தெரிவது இல்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஒளிராத விளக்கை ஒளிரசெய்ய வேண்டும்.
  பாலகிருஷ்ணன், நேதாஜிபுரம்.
  


Next Story