தியாகதுருகம் அரசு பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி படிக்கும் காலங்களில் தனித்திறமைகளையும் கூடுதலாக வளர்த்துக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை


தியாகதுருகம் அரசு பள்ளியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி படிக்கும் காலங்களில் தனித்திறமைகளையும் கூடுதலாக வளர்த்துக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு  கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 27 March 2022 10:05 PM IST (Updated: 27 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

படிக்கும் காலங்களில் தனித்திறமைகளையும் கூடுதலாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என தியாகதுருகம் அரசு பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை வழங்கினார்

கண்டாச்சிமங்கலம்

அரசு பெண்கள் பள்ளி

தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கற்றலின் ஊக்கமும், வெற்றியின் ஆக்கமும் குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சசி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டரின் மனைவி விஜிதா அன்னிமாலா கலந்து கொண்டார். 

அட்டவணைப்படு்த்தி

நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் பதில் அளித்து பேசுகையில், டாக்டர் ஆக விருப்பமுள்ளவர்கள் கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும், தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கிவிட்டு சமூக வலைதளங்களில் மூழ்காமல், படிப்பதற்கான நேரங்களை அட்டவணைப்படுத்தி படிக்க வேண்டும். சின்னசேலத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், புத்தகங்கள் மற்றும் முந்தைய ஆண்டுக்கான கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம். 
மேலும் மாணவர்கள் படிக்கும் காலங்களில் விளையாட்டு, பேச்சு, நடனம், பாட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டு கூடுதலாக தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். 
இதில் தியாகதுருகம் பகுதியில் உள்ள 8 அரசு பள்ளிகளை சேர்ந்த 18 மாணவ-மாணவிகள், உதவி தலைமை ஆசிரியர்கள் லெட்டி ஷியா, பாலசுப்பிரமணியன், ஜெயவேல், செந்தில்குமார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story