முத்துப்பேட்டை அருகே காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி கொலையா? போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே காயங்களுடன் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டை அருகே காயங்களுடன் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி பிணம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சின்னையன் (வயது50). கூலித்தொழிலாளி. வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சின்னையன் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சின்னையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலையா?
இந்தநிலையில் சின்னையன் மகன் மகேஷ் (28) தனது தந்தை சின்னையன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், யாரேனும் முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்து இருக்கலாம் என்றும் முத்துப்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story