திருக்கோவிலூர் அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2022 10:32 PM IST (Updated: 27 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பெண் தர மறுத்ததால் வீடு புகுந்து தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வரையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி தைரியலட்சுமி(வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் வினோத் உள்பட 4 பேர் திருமணத்துக்கு பெண் கேட்டு உள்ளனர். ஆனால் அவரோ தர மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த வினோத் உள்பட 4 பேரும் வீட்டின் உள்ளே புகுந்து தைரியலட்சுமியை தாக்கி மானபங்கம்செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வினோத், திருவண்ணாமலை வேங்கிக்கால் அம்மு, பாளையம் கிராமம் சுபாஷ் மற்றும் ஆர்க்கவாடி கிராமம் கோபி ஆகிய 4 பேர் மீதும் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story