கல்வராயன்மலையில் வன விலங்குகள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி


கல்வராயன்மலையில்  வன விலங்குகள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 27 March 2022 10:47 PM IST (Updated: 27 March 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் வன விலங்குகள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையானது சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதியாக 1,100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்தமலையில் கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் மற்றும் பறவைகள், அரியவகை மூலிகைகள், விலை உயர்ந்த மரங்கள் ஆகியவை உள்ளன. வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் கள்ளக்குறிச்சி, சேராப்பட்டு, வெள்ளிமலை, இன்னாடு, கோமுகி, பாலப்பட்டு என 6 வனச்சரகங்கள் இங்கு உள்ளன. இந்தநிலையில் கல்வராயன்மலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் வனவிலங்குகள் ஆர்வலரும், தன்னார்வலருமான கீர்த்தி தலைமையில் குழுவினர் மற்றும் வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வனக்காவலர்களும் இணைந்து  வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story