காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கோருவதா?- மெகபூபா முப்தியின் பேச்சுக்கு சிவசேனா கண்டனம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 March 2022 10:52 PM IST (Updated: 27 March 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கூறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் பேச்சுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை, 
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கூறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் பேச்சுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவசேனா எதிர்ப்பு 
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி சமீபத்தில் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை காஷ்மீரில் அமைதி என்பது இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். 
இவரின் கருத்துக்கு சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர்கள் சஞ்சய் ராவத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்களால் இதுபோன்ற கருத்தை கூற முடியும் என தெரிவித்துள்ளார். 
நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா ஆதரவு
மக்கள் ஜனநாயக கட்சி ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளுக்கு அனுதாபியாகவும் தான் உள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை, மெகபூபா முக்தி ஆதரித்தார். 
ஆனால் அவருடன் கூட்டணியை உருவாக்கி பா.ஜனதா காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது. இப்போது அதே மெகபூபா முக்தி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார். இது பா.ஜனதா செய்த பாவத்தின் விளைவு. 
ஆட்சியை பகிர்ந்துகொள்வதின் மூலம் பா.ஜனதா அவருக்கு அதிகாரத்தை அளித்தது. எனவே மெகபூபா முக்தி கூறும் வார்த்தைகளுக்கு பா.ஜனதாவும் பொறுப்பாகும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story