உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன்(வயது 8). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாளான நேற்று மணிகண்டன் தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தின் மீது ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த அவன் மயங்கி கிடந்தான்.
இந்த நிலையில் விளையாடச் சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர் வயல் வெளிக்கு தேடிச் சென்ற போது அங்கு மணிகண்டன் மயங்கி கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவனை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story