டயர் கடையில் தீ விபத்து


டயர் கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 27 March 2022 11:06 PM IST (Updated: 27 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் டயர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.


திண்டிவனம், 

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதி சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்தவர் அப்பு மணி(வயது 62). டயர் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் திடீரென அவரது கடையில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்,

 திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

 இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story