தின்தோஷி போலீஸ் நிலையத்தில்- விசாரணை கைதியை 7 மணி நேரம் தாக்கிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர்- பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 March 2022 11:20 PM IST (Updated: 27 March 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

தின்தோஷி போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியை 7 மணி நேரமாக அடித்து சித்ரவதை செய்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மும்பை, 
தின்தோஷி போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியை 7 மணி நேரமாக அடித்து சித்ரவதை செய்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணைக்கு சென்ற நபர்
மும்பை மலாடு கிழக்கு பகுதியில் கடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பை சேர்ந்தவர்கள் மோதி கொண்டனர். இது தொடர்பாக தின்தோஷி போலீஸ் நிலையத்தை சேர்ந்த உதவி இன்ஸ்பெக்டர் யுவராஜ் இனாம்தார் என்பவர் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் நிலையம் அழைத்து சென்றார். 
மேலும் அந்த நபர் மீது பெட்டி வழக்கு பதிவு செய்து, மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் சுமார் 7 மணி நேரமாக சரமாரியாக அடித்து சித்ரவதை செய்து விசாரித்தார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
பணி இடைநீக்கம்
இந்தநிலையில் மறுநாள் வெளியே வந்த பாதிக்கப்பட்ட விசாரணை கைது சம்பவம் குறித்து போலீஸ் உதவி கமிஷனர் சோம்நாத் கார்கேவிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், உதவி இன்ஸ்பெக்டர் யுவராஜ் இனாம்தார் அந்த நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் விசாரணை என்ற பெயரில் சரமாரியாக அடித்து உதைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து அவர் உயர் போலீஸ் அதிகாரியிடம் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்தார். இதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரவின் பட்வால் தவறு செய்த உதவி இன்ஸ்பெக்டர் யுவராஜ் இனாம்தாரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

Next Story