டிரைவர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்- அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம்


டிரைவர் பணியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்- அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம்
x
தினத்தந்தி 28 March 2022 12:30 AM IST (Updated: 27 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

டிரைவர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்:-

டிரைவர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. 

பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வன்னியநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். இதில் மாநில தலைவர் சுப்பிரமணி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் மாவட்ட சங்கத்துக்கு இடம் மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிப்பது. தர ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நிரந்தர டிரைவர் பணியிடங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்ப வேண்டும். 

வீட்டு மனைப்பட்டா

வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். 14 சதவீதம் அகவிலைப்படி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாநில பொருளாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்ட துணைத்தலைவர் நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story