சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2022 11:28 PM IST (Updated: 27 March 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பெரியகுளம் வி.மாத்தூர் பாளையம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அந்த பெண்ணின் மகளான 13 வயது சிறுமிக்கு, அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் புதுச்சேரி மாநிலம் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கோபி (வயது 45) என்பவர் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் தயர்  விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, போக்சோ சட்டத்தின் கீழ் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story