மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி


மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 March 2022 11:29 PM IST (Updated: 27 March 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி  10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன். தாசில்தார் ரவிச்சந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரகாசம் ஆகியோர் பேசினர். 
    பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு பின்னர் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்து  தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன், முதுகலை ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதில் மாணவ-மணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Next Story