சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழையூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழையூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
வேளாங்கண்ணி அருகே கீழையூர் கடைத்தெருவில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா தலைமை தாங்கினார்.
சிலிண்டருக்கு மாலை அணிவிப்பு
இதில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுஜாதா, ஒன்றிய தலைவர் சுசீலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், கிளை செயலாளர் நடேஷ்ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story