நாகர்கோவிலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 March 2022 11:41 PM IST (Updated: 27 March 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்:
கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதை எதிர்த்து குமரி மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு, முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று நடந்தது. இதற்கு குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கான் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சத்தார் அலி, த.மு.மு.க. மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, சாதிக் அலி, அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, சுல்பிகர் அலி, பாலபிரஜாபதி அடிகளார், ஹிலாரியஸ், ஆயிஷா நிசார், நூர்முகமது ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
---

Next Story