நாகையில், மாரத்தான் போட்டி


நாகையில், மாரத்தான் போட்டி
x

சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி நாகையில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்:
சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி நாகையில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
அமுத பெருவிழா
நாகை புதிய கடற்கரையில் 75-வது சுதந்திர தின ‘அமுதப்பெருவிழா’ கலை விழா மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. 
  மேலும் பல்வேறு துறைகளில் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் மற்றும் செயல்படுத்தப்படும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த பேச்சு போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்டன.
மாரத்தான் போட்டி
இந்தநிலையில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் செய்திமக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை யொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை  கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
இதில் சுமார் 300 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். நிகழ்ச்சியில செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால்,  நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story