எஸ்.புதூர் அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா


எஸ்.புதூர் அருகே களை கட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 27 March 2022 11:43 PM IST (Updated: 27 March 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது. கிராம மக்கள் மீன்களை உற்சாகத்துடன் பிடித்தனர்

எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே மீன்பிடி திருவிழா களை கட்டியது. கிராம மக்கள் மீன்களை உற்சாகத்துடன் பிடித்தனர்.
மீன்பிடி திருவிழா
எஸ்.புதூர் அருகே புழுதிபட்டியில் உள்ள புழுதி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிகாலை முதலே கண்மாயை சுற்றிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஊர்முக்கியஸ்தர்கள் கொடி அசைத்ததை தொடர்ந்து கண்மாயில் பொதுமக்கள் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர். 
ஊத்தா, வலை, கூடை, கச்சா ஆகியவற்றை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இதில் கெண்டை, கெளுத்தி, விரால், ஜிலேபி வகை மீன்கள் கிடைத்தன. ஒருவருக்கொருவர்போட்டிபோட்டு கொண்டு மீன்களை அள்ளினர். இதனால் அந்த பகுதியே திருவிழா போல் களை கட்டி காணப்பட்டது.
மீன்குழம்பு மணத்தது
பின்னர் தாங்கள் பிடித்த மீன்களை உறவினர்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் வீட்டிற்கு எடுத்து சென்று மீன்குழம்பு சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிட்டனர். இதனால் புழுதிப்பட்டி கிராம பகுதியில் நேற்று மீன்குழம்பு மணத்தது.

Next Story