திருட்டு வழக்கில் வாலிபர் கைது
திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன் (வயது 54). இவருடன் செல்போன் அழைப்பு மூலமாக ஒருவர் பேசி உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் நட்பாக பேசியதாக தெரிகிறது.
அதனடிப்படையில் அந்த நபர் முருகேசனின் வீட்டுக்கு வந்தார். அப்போது, அவரது வீட்டில் இருந்த டி.வி., ஸ்கூட்டர், செல்போன் ஆகியற்றை அந்த நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணம் அடுத்த கழிகுளம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சுந்தரேசன் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் முருகேசன் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சுந்தரேசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story