சாலையோரம் கவிழ்ந்த வேன்; பயணிகள் தப்பினர்
திருவாடானை அருகே சாலையோரம் வேன் கவிழ்ந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, தளிர்மருங்கூர் கிராமத்தில் இருந்து வேம்புவயல் நோக்கி பயணிகள் சிலருடன் வேன் ஒன்று நேற்று மதியம் சென்றது. அந்த வேன் தளிர்மருங்கூர் கிராமம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் அந்த வேன் சாலையோரம் வயலுக்குள் இறங்கி கவிழ்ந்தது. இந்த வேனில் இருந்த பெண்கள், டிரைவர் கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனர். அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். பின்னர் அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரம் மண் அரிப்பு காரணமாக தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.
Related Tags :
Next Story