536 மாணவிகளுக்கு பட்டம்


536 மாணவிகளுக்கு பட்டம்
x
தினத்தந்தி 28 March 2022 12:02 AM IST (Updated: 28 March 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 536 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

கீழக்கரை,

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் அல்ஹாஜ்.ஏ.கே.காலித் புகாரி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு கல்வி அமைச்சகம் வளர்ச்சித்துறை வளமைய இயக்குனர் மோகித் கேம்பீர் கலந்து கொண்டு  இளநிலைப்பிரிவில் 498, முதுநிலைப்பிரிவில் 33, ஆய்வியல் நிறைஞர் பிரிவில் 5 என மொத்தம் 536 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 47 மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களையும் வழங்கினார். சென்னை யூ.என்.ஐ.சி. செயலாளர் மவுலானா மவுலவி அல்ஹாஜ் எம்.முகமது ஹக்கீம் சுல்தான் சிறப்பு விருந்தினராக கலந்து ெகாண்டு 191 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
இதில் தொண்டி முகம்மது சித்திக், ஆராய்ச்சி மற்றும் நிறுவன தொடர்பு இயக்குனர் எம்.எஸ்.இர்பான் அகமது, தேர்வு நெறியாளர் முத்து மாரீஸ்வரி, பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத்கான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story