ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 28 March 2022 12:16 AM IST (Updated: 28 March 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை;
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக வள்ளாலகரம் ஊராட்சியில் ரூ.23.57 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ்  ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளையும், ரூ.10.93 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிமெண்டு சாலை அமைக்கும் பணி
இதை தொடர்ந்து  மணக்குடி ஊராட்சியில் தூய்மை பாரத இந்திய திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் செலவில் கழிப்பறை மற்றும் குளியலறை கட்டும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.62 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
திருவிழந்தூர் ஊராட்சியில் ரூ.18.23 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளையும், அருவாப்பாடி கிராம ஊராட்சியில் ரூ.5.75 லட்சம் செலவில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த சமூதாய கழிப்பறை மற்றும் குளியறை கட்டும் பணிகளையும், கீழமருதந்தநல்லூர் கிராம ஊராட்சியில் ரூ.14.14 லட்சம் செலவில் புதிய நெல் சேமிப்பு கூடம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளி சுற்றுச்சுவர்
இதையடுத்து சேத்தூர் ஊராட்சியில் ரூ.12.02 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுசுவர் கட்டும் பணிகளையும்,ரூ.6.25 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கழிப்பறை கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும் தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின்போது ஒன்றிய ஆணையர் அன்பரசன், (வட்டார வளர்ச்சி அலுவலர்) ஊராட்சிகள் மீனா, ஒன்றிய பொறியாளர் பூங்குழலி, வள்ளாலகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். 

Next Story