கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிட மாற்றம்
சமூக வலைத்தளத்தில் ஆடியோ வைரலானதை ெதாடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன்.(வயது 80). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம், பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வீரபத்திரன் புகார் மனு கொடுத்து உள்ளார். இந்த நிலையில் நிலத்தகராறு காரணமாக வீரபத்திரனின் மருமகன் கண்ணுச்சாமி, கீழத்தூவல் கிராம நிர்வாக அலுவலர் பழனியிடம் செல்போனில் ெதாடர்பு கொண்டு பேசும் போது, கிராம நிர்வாக அலுவலர் பழனி அநாகரிகமாக பேசியதோடு, முதல்-அமைச்சர் பற்றியும் பேசியதாக தெரிகிறது. இது குறித்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.இந்த நிலையில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர், கீழத்தூவல் கிராம நிர்வாக அலுவலர் பழனியை சோனைபிரியன்கோட்டை குரூப் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார். விளங்களத்தூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், கீழத்தூவல் கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கீழத்தூவல் கிராம உதவியாளர் சாமிநாதன் கடலாடி தாலுகா இருவேலி குரூப் கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பழனி, உதவியாளர் சாமிநாதன் ஆகியோர் மீது பொதுமக்கள் அனுப்பிய வாட்ஸ்அப் புகார் தொடர்பாக இருவரிடமும் இன்று(திங்கட்கிழமை) பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story