மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

லாரியில் கொண்டு சென்ற மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நொய்யல்,
புகழூரில் செயல்பட்டு வரும் செய்தித்தாள் காகித ஆலைக்கு மரக்கூழ் தயாரிப்பதற்காக நாமக்கல் மாவட்ட பகுதியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பாலத்துறை அருகே தார் சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த வேகத்தடையில் ஏறி, இறங்கிய போது லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் திடீரென சரிந்தன. அப்போது லாரியை பின் தொடர்ந்து வந்த கார் மீது  மரக்கட்டைகள் விழுந்தன. இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இதையடுத்து, லாரி டிரைவர் சாலையோரமாக லாரியை நிறுத்தினார். தார் சாலையின் நடுவே மரக்கட்டைகள் குவிந்து கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு அந்த வழியாக வாகனங்கள் சென்றன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story