குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 March 2022 12:34 AM IST (Updated: 28 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே, ஆழ்துளை கிணற்றில் குழாயில் மண் அடைத்ததால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே, ஆழ்துளை கிணற்றில் குழாயில் மண் அடைத்தால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
குழாயில் மண் அடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஆழ்துளை கிணற்றில் உள்ள குழாயில் மண்அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 
 சரி செய்யும் பணி தீவிரம்
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட தணிக்கை அலுவலர் மஞ்சுளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், தனலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் வடரங்கம் கிராமத்தில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வெளியேற்றும் நிலையத்துக்கு சென்று பழுதான குழாயை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட மண் அடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story